Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சென்னை எழும்பூர் விரைவு ரயில் புதுச்சேரி - விழுப்புரம் இடையே ரத்து

சென்னை எழும்பூர் விரைவு ரயில் புதுச்சேரி - விழுப்புரம் இடையே ரத்து

சென்னை எழும்பூர் விரைவு ரயில் புதுச்சேரி - விழுப்புரம் இடையே ரத்து

சென்னை எழும்பூர் விரைவு ரயில் புதுச்சேரி - விழுப்புரம் இடையே ரத்து

ADDED : ஜூன் 06, 2024 02:24 AM


Google News
புதுச்சேரி: ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக சென்னை எழும்பூர் விரைவு ரயில் புதுச்சேரி - விழுப்புரம் பகுதி அளவு ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரி - விழுப்புரம் ரயில் பாதையில் சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரி வரை ரயில் பாதையில் பழுது பார்க்கும் பணி நடக்க உள்ளது. இதனால், இன்று 6ம் தேதி மாலை 6:10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு வரும் முன்பதிவில்லா விரைவு ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகிறது.

அதே போல, இந்த ரயில் நாளை 7ம் தேதி காலை 6:25 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்படுகிறது.

இவ்வாறு, திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us