/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எல்.டி.சி., யு.டி.சி., பணி காத்திருப்போருக்கு வரும் 29ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு எல்.டி.சி., யு.டி.சி., பணி காத்திருப்போருக்கு வரும் 29ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு
எல்.டி.சி., யு.டி.சி., பணி காத்திருப்போருக்கு வரும் 29ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு
எல்.டி.சி., யு.டி.சி., பணி காத்திருப்போருக்கு வரும் 29ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு
எல்.டி.சி., யு.டி.சி., பணி காத்திருப்போருக்கு வரும் 29ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு
ADDED : ஜூலை 20, 2024 04:34 AM
புதுச்சேரி: எல்.டி.சி., யு.டி.சி., பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, காத்திருப்போர் பட்டியலில் உள்ள 60 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 29 ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 116 யு.டி.சி., பணியிடங்களுக்கு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் போட்டி தேர்வு நடத்தப்பட்டு, மெரிட் அடிப்படையில் பணியாட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதேபோல அரசு துறையில் காலியாக உள்ள 165 எல்.டி.சி., 55 ஸ்டோர் கீப்பர் கிரேடு -3 ஆகிய பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போட்டி தேர்வு நடத்தப்பட்டது.
யு.டி.சி., மற்றும் எல்.டி.சி., பணிக்கு தேர்வானவர்களில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் பலர் பணியில் சேரவில்லை. பல இடங்கள் காலியாக உள்ளது.
இதனால், எல்.டி.சி., யு.டி.சி., பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பின்பு, காத்திருப்போர் பட்டியலில் உள்ளோரை கொண்டு, தற்போது காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்டுள்ளது.
யு.டி.சி., காத்திருப்போர் பட்டியலில் உள்ள 7 பேர், எல்.டி.சி., காத்திருப்போர் பட்டியலில் உள்ள 53 பேருக்கு வரும் 29 ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது.
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வயது, கல்வி, குடியிருப்பு, சாதி சான்றிதழ்களுடன் வர அறிவிக்கப்பட்டுள்ளது.