/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஊர்காவல்படை வீரர் பணிக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு ஊர்காவல்படை வீரர் பணிக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
ஊர்காவல்படை வீரர் பணிக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
ஊர்காவல்படை வீரர் பணிக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
ஊர்காவல்படை வீரர் பணிக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
ADDED : ஜூலை 08, 2024 04:13 AM
புதுச்சேரி: ஊர்காவல்படை வீரர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு நேரில் வராதவர்கள், தேர்வு பட்டியலில் இருந்து நீக்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி போலீசில் காலியாக உள்ள 420 ஆண்கள், 80 பெண் ஊர்காவல்படை வீரர்கள் தேர்வு செய்ய விண்ணப்பம் பெறப்பட்டது. ஆண்கள் 15,697 பேரும், பெண்கள் 4492 பேர் விண்ணப்பித்தனர். உடற்தகுதி தேர்வு கடந்த பிப்ரவரியில் நடந்தது. இதில், ஆண்கள் 3034 பேரும், பெண்கள் 1195 பேர் என, 4,229 பேர் தகுதி பெற்றனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 30ம் தேதி நடத்தப்பட்டு, மறுநாளே தேர்வு முடிவுகள் வெளியானது.
தேர்வில் வெற்றி பெற்று, பணிக்கு தேர்வான ஊர்காவல்படை வீரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (8ம் தேதி) துவங்கி வரும் 11ம் தேதி வரை நடக்கிறது.
புதுச்சேரியில் சான்றிதழ் சரிபார்ப்பு கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று காலை 8:30 மணிக்கு துவங்கி நடக்கிறது.
இதில், பணிக்கு தேர்வானவர்கள் வயது உறுதிப்படுத்தும் பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள், குடியிருப்பு சான்றிதழ், சமீபத்தில் எடுக்கப்பட்ட 8 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பம், உடற்தகுதி மற்றும் எழுத்து தேர்வு ஹால்டிக்கெட் கொண்டுவர வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு நேரில் வராதவர்கள், ஊர்காவல்படை வீரர் தேர்வு பட்டியலில் இருந்து நீக்கப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு 9ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை மருத்துவ பரிசோதனை நடக்கிறது.