/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த சுய உதவி குழுக்களுக்கு சான்றிதழ் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த சுய உதவி குழுக்களுக்கு சான்றிதழ்
திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த சுய உதவி குழுக்களுக்கு சான்றிதழ்
திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த சுய உதவி குழுக்களுக்கு சான்றிதழ்
திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த சுய உதவி குழுக்களுக்கு சான்றிதழ்
ADDED : ஜூலை 12, 2024 05:29 AM

புதுச்சேரி: தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
உழவர்கரை நகராட்சி தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் வாயிலாக சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு வகையான திறன், தொழில், பொருளாதார மேம்பாடு தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் 20 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு சிறு தானிய பொருடகள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உள்ளாட்சி துறை இயக்குனர் சக்திவேல், திட்ட அதிகாரி ஜெயந்தி, புதுச்சேரி ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி ஜெயந்தி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், காமராஜர் வேளாண் அறிவியல் பண்ணை தொழில்நுட்ப வல்லுனர் பொம்மி ஆகியோர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கூறுகையில், 'இது போன்ற பயிற்சிகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் வாழ்வாதார மற்றும் திறன் மேம்பாட்டிற்காகவும், சுய தொழில் துவங்கவும் உழவர்கரை நகராட்சி மத்திய அரசின் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் வழியாக செயல்படுத்தி வருகிறது.
வரும் காலங்களில் இது போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது' என்றார். நிகழ்ச்சியில் திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.