/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கம்பெனி ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு கம்பெனி ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு
கம்பெனி ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு
கம்பெனி ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு
கம்பெனி ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூலை 09, 2024 11:45 PM
திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த கொடாத்துார் ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் ஆதிபுரிஷ்வரன், 20; திருபுவனையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் புதுச்சேரி சென்று விட்டு வழுதாவூர் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வழுதாவூர் தனியார் கம்பெனி அருகே நின்றிருந்த தமிழக பகுதியான முட்ராம்பட்டை சேர்ந்த இளஞ்செழியன் மற்றும் அவரது நண்பர் ஆதிபுரிஷ்வரனை பார்த்து, பைக்கை நிறுத்துமாறு கூறினர்.
ஆனால் ஆதிபுரிஷ்வரன் பைக் நிறுத்தாமல் வேகமாக வந்தார். இதையடுத்து, இருவரும் ஆதிபுரிஷ்வரனை பின்தொடர்ந்து வந்து, குமாரப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே மடக்கி, தகராறில் ஈடுபட்டனர். இளஞ்செழியனுடன் இருந்த நபர், கையில் வைத்திருந்த கத்தியால் ஆதிபுரிஷ்வரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ஆதிபுரிஷ்வரன் அளித்த புகாரின் பேரில், இளஞ்செழியன் மற்றும் அவரது நண்பர் மீது காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.