/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறைச்சி கடைக்கு தீவைத்தவர் மீது வழக்கு இறைச்சி கடைக்கு தீவைத்தவர் மீது வழக்கு
இறைச்சி கடைக்கு தீவைத்தவர் மீது வழக்கு
இறைச்சி கடைக்கு தீவைத்தவர் மீது வழக்கு
இறைச்சி கடைக்கு தீவைத்தவர் மீது வழக்கு
ADDED : ஆக 07, 2024 05:32 AM
புதுச்சேரி : இறைச்சி கடையை தீவைத்து கொளுத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கூடப்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் இளையராஜா, 39. இவர், கூடப்பாக்கம் மெயின்ரோட்டில் கொட்டகை அமைத்து இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்த கடையினை கூடப்பாக்கம் பாலன் நகரைச் சேர்ந்த சக்தி, தீவைத்து கொளுத்தினார்.
இதுகுறித்து இளையராஜா வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சக்தி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.