ADDED : ஜூன் 20, 2024 03:35 AM
பாகூர் : சோரியாங்குப்பத்தில் வேப்ப மரம் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக, இருவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் நவாப் தோப்பு பகுதியில் இருந்த வேப்ப மரங்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் வெட்டி உள்ளனர். இது குறித்து சோரியாங்குப்பம் செடல் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தினகரன் பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், பாகூர் போலீசார், மரத்தை வெட்டிய சம்பவம் தொடர்பாக, சோரியாங்குப்பத்தை சேர்ந்த சம்பத் அவரது சகோதரர் சங்கர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.