/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆற்றில் பாய்ந்த கார்: 5 பேர் தப்பினர் ஆற்றில் பாய்ந்த கார்: 5 பேர் தப்பினர்
ஆற்றில் பாய்ந்த கார்: 5 பேர் தப்பினர்
ஆற்றில் பாய்ந்த கார்: 5 பேர் தப்பினர்
ஆற்றில் பாய்ந்த கார்: 5 பேர் தப்பினர்
ADDED : ஜூன் 02, 2024 04:47 AM
பாகூர்: கடலுார் அருகே ஆற்றில் கார் பாய்ந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த 5 பேர், நேற்று இரவு கடலுார் சாவடியில் நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர், 5 பேரும் மது அருந்த வோல்ஸ்வேகன் காரில் கடலுார் கலெக்டர் அலவலகம் எதிரே உள்ள தென்பெண்ணையாற்று தரைப்பாலம் வழியாக கொம்மந்தான்மேடு கிராமத்தில் உள்ள மதுக்கடைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, மழை பெய்து கொண்டிருந்த நிலையில், ஏற்கனவே வடக்கு கரை பகுதியில் தரைபாலம் உடைப்பு ஏற்பட்டு இருப்பதை கவனிக்காமல் டிரைவர் காரை ஓட்டியதால், கார் நேரடியாக ஆற்றிற்குள் பாய்ந்து நீரில் மூழ்கியது.
ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால், காருக்குள் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். கிரேன் மூலமாக காரை மீட்கும் முயற்சி நடந்தது.