/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சி.ஏ.பி., கிரிக்கெட் போட்டி : டஸ்கர்ஸ், ஷார்க்ஸ் அணி வெற்றி சி.ஏ.பி., கிரிக்கெட் போட்டி : டஸ்கர்ஸ், ஷார்க்ஸ் அணி வெற்றி
சி.ஏ.பி., கிரிக்கெட் போட்டி : டஸ்கர்ஸ், ஷார்க்ஸ் அணி வெற்றி
சி.ஏ.பி., கிரிக்கெட் போட்டி : டஸ்கர்ஸ், ஷார்க்ஸ் அணி வெற்றி
சி.ஏ.பி., கிரிக்கெட் போட்டி : டஸ்கர்ஸ், ஷார்க்ஸ் அணி வெற்றி
ADDED : ஜூலை 11, 2024 06:09 AM

புதுச்சேரி, : கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம். நிறுவனம் சார்பில் 6 அணிகள் மோதும் 20 ஓவர் ஆண்கள் கிரிக்கெட் போட்டி சி.ஏ.பி.-சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது.
நேற்று காலை 8:00 மணிக்கு நடந்த போட்டியில் பந்தர்ஸ், டஸ்கர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பந்தர்ஸ் அணி 6 விக்கெட் இழந்து 173 ரன்கள் எடுத்தது.
பந்தர்ஸ் அணியின் அமீர் ழீஷான் 46 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். டஸ்கர்ஸ் அணியின் கிருஷ்ணா குமார் 4 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய டஸ்கர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 177 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டஸ்கர்ஸ் அணியின் உஜிவால் கவுடா 39 பந்துகளில் 62 ரன்கள் அடித்தார். சிறப்பாக பந்து வீசிய டஸ்கர்ஸ் அணியின் கிருஷ்ணா குமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பிற்பகல் 12:30 மணிக்கு நடந்த போட்டியில் ஷார்க்ஸ், லயன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஷார்க்ஸ் அணி 20 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. ஷார்க்ஸ் அணியின் எம் மரியா அஜய் 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய லயன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது. அந்த அணியின் கஜேந்தர் தன்வார் 29 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார்.ஷார்க்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பான பந்துவீச்சால் ஷார்க்ஸ் அணியின் லவ் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.