/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி ரயில்களின் பகுதி நேர சேவை ரத்து புதுச்சேரி ரயில்களின் பகுதி நேர சேவை ரத்து
புதுச்சேரி ரயில்களின் பகுதி நேர சேவை ரத்து
புதுச்சேரி ரயில்களின் பகுதி நேர சேவை ரத்து
புதுச்சேரி ரயில்களின் பகுதி நேர சேவை ரத்து
ADDED : ஜூலை 28, 2024 06:21 AM
புதுச்சேரி, : இரண்டு புதுச்சேரி ரயில்களின் பகுதி நேர சேவை, இன்ஜினியரிங் பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மற்றும் சின்னபாபுசமுத்திரம் இடையே, இன்ஜினியரிங் பணிகள் நடந்து வருகின்றன. அதனால், திருப்பதியில் இருந்து அதிகாலை 4:00 மணிக்கு நாள்தோறும் புறப்படும், திருப்பதி - புதுச்சேரி ( எண்: 16111) முன் பதிவில்லாத மெமு விரைவு ரயில், அங்கிருந்து குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு, விழுப்புரம் வரை மட்டுமே செல்லும்.
அதற்கு பிறகு, விழுப்புரத்தில் இருந்து, புதுச்சேரிக்கு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, புதுச்சேரியில் இருந்து மாலை 4:00 மணிக்கு புறப்படும், புதுச்சேரி - சென்னை எழும்பூர் (எண்: 06020) முன்பதிவில்லா மெமு ரயில் சேவை, விழுப்புரம் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில், மாலை 4:45 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு, சென்னை எழும்பூரை சென்றடையும்.
இந்த தகவலை, தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் தெரிவித்துள்ளது.