ADDED : ஜூலை 09, 2024 11:42 PM
பாகூர் : கிருமாம்பாக்கம் அருகே விபசார வழக்கில், சேலத்தை சேர்ந்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
கிருமாம்பாக்கம் பகுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு காட்டுக்குப்பத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு வாடகையில் வசித்து வரும் கடலுார், முதுநகரை சேர்ந்த ஒரு பெண், இளம் பெண்களை தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து, 2 பெண்களை மீட்டு போலீசார், அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண்னை கைது செய்தனர். இந்த வழக்கில் புரோக்கராக செயல்பட்டு வந்த சேலம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் 45; என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.