/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மருத்துவமனை பிணவறை பிரீசர் பழுது நோயாளிகள் அறையில் சிறுவன் உடல் மருத்துவமனை பிணவறை பிரீசர் பழுது நோயாளிகள் அறையில் சிறுவன் உடல்
மருத்துவமனை பிணவறை பிரீசர் பழுது நோயாளிகள் அறையில் சிறுவன் உடல்
மருத்துவமனை பிணவறை பிரீசர் பழுது நோயாளிகள் அறையில் சிறுவன் உடல்
மருத்துவமனை பிணவறை பிரீசர் பழுது நோயாளிகள் அறையில் சிறுவன் உடல்
ADDED : ஜூன் 13, 2024 08:19 AM
புதுச்சேரி : ஏனாம் அரசு மருத்துவமனை பிணவறையில் பிரீசர் பழுதால் இறந்த சிறுவனின் உடலை நோயாளி அறையில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏனாம் அருகே உள்ள தியம் கிரியாம்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் நேற்று குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.
அவரது உடல் ஏனாம் அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், பிணவறையில் இருந்த பிரீசர் பழுதாகி பல மாதங்களாக சரிசெய்யப்படவில்லை. இதனால், சிறுவனின் உடலை நோயாளிகள் அறையில் உள்ள படுக்கையில் வைத்திருந்தனர்.
அதனை கண்டித்து, சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனை முன், போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் இறந்தால், உடலை பாதுகாத்து வைக்க வசதியில்லாமல் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிற்கு தான் உடலை எடுத்து செல்லும் நிலை இருப்பதாக, துறை அதிகாரிகளிடம் அவர்கள் புகார் அளித்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து ஏனாம் போலீசார் மற்றும் துணை இயக்குனர் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஒரு மாதத்திற்குள் பிணவறையில் பழுதான பிரீசர் சரி செய்யப்படும் என, உறுதியளித்தனர்.
அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் ஏனாம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.