Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அமைச்சர்கள் மாற்றத்தில் பா.ஜ.,வுக்கு சம்பந்தமில்லை: சட்டசபையில் அனல் பறந்த விவாதம்

அமைச்சர்கள் மாற்றத்தில் பா.ஜ.,வுக்கு சம்பந்தமில்லை: சட்டசபையில் அனல் பறந்த விவாதம்

அமைச்சர்கள் மாற்றத்தில் பா.ஜ.,வுக்கு சம்பந்தமில்லை: சட்டசபையில் அனல் பறந்த விவாதம்

அமைச்சர்கள் மாற்றத்தில் பா.ஜ.,வுக்கு சம்பந்தமில்லை: சட்டசபையில் அனல் பறந்த விவாதம்

ADDED : ஆக 06, 2024 07:12 AM


Google News
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைமீதான விவாதம் நடந்தது.

கல்யாணசுந்தரம்(பா.ஜ.,): மீண்டும் இலவச அரிசி போடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் பா.ஜ., அமைச்சர் சாய்சரவணன்குமார் தான். அவர் பல முறை டில்லி சென்று அலைந்து திரிந்து ஒப்புதல் பெற முக்கிய காரணமாக இருந்தார். நானே அதை பார்த்து இருக்கிறேன். இறுதியில் அவரிடம் இருந்து அந்த துறையை மாற்றிவிட்டார்கள். இது கூட்டணி ஆட்சி. பா.ஜ.,வுக்கு நல்ல பெயர் வாங்கக்கூடாது என்று மாற்றிவிட்டனர்.

அமைச்சர் சாய் சரவணன்குமார்: பொறுத்தது போதும் பொங்கி எழு கல்யாணசுந்தரம்

நாஜிம்-(தி.மு.க.,): ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது தாம். அதை இதுவரை கேள்வி தான் பட்டுள்ளேன். இப்போது நேரிலேயே பார்க்கிறேன்.

ரமேஷ்(என்.ஆர்.காங்.,):துறையில் ஊழல், முறைகேடு நடக்கிறது என்று குற்றம்சாட்டிய கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., இப்போது மாற்றி பேசுகிறார். கூட்டணி தர்மத்தை மதிப்பதால் வாய் திறக்கவில்லை. அமைச்சர் துறை மாற்றுவது முதல்வர் அதிகாரம்.

கல்யாணசுந்தரம் பா.ஜ.,: முன்பு தலித் பெண் அமைச்சர் மாற்றப்பட்டார். இப்போது ஆதிதிராவிடர் அமைச்சர் இலாகா பறிக்கப்பட்டுள்ளதால் ஆதிதிராவிடர் விரோதமான அரசாக நினைக்கிறார்கள். இதனால் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் எங்களுக்கு ஓட்டளிக்கவில்லை.

முதல்வரால் தான் பா.ஜ.,வை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விரோதமாக நினைக்கிறார்கள். இரண்டு அமைச்சரை மாற்றியதில் பா.ஜ.,வுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

துணை சபாநாயகர் ராஜவேலு: ஆதிதிராவிடர் மக்களுக்கு தான் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் நிறைய திட்டங்களை அறிவித்துள்ளார். பட்ஜெட் உரையில் அனைத்துமே உள்ளது. இதனை அனைத்து எம்.எல்.ஏக்களும் ஏற்றுகொள்ளுவார். அப்படி இருக்கும்போது இப்படி சொல்ல கூடாது.

இவ்வாறு காரசாரமாக விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us