/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டு எண்ணும் வரை எங்கும் செல்ல கூடாது முகவர்களுக்கு பா.ஜ., அறிவுறுத்தல் ஓட்டு எண்ணும் வரை எங்கும் செல்ல கூடாது முகவர்களுக்கு பா.ஜ., அறிவுறுத்தல்
ஓட்டு எண்ணும் வரை எங்கும் செல்ல கூடாது முகவர்களுக்கு பா.ஜ., அறிவுறுத்தல்
ஓட்டு எண்ணும் வரை எங்கும் செல்ல கூடாது முகவர்களுக்கு பா.ஜ., அறிவுறுத்தல்
ஓட்டு எண்ணும் வரை எங்கும் செல்ல கூடாது முகவர்களுக்கு பா.ஜ., அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 03, 2024 04:50 AM
புதுச்சேரி, : ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை எங்கும் செல்ல கூடாது என, முகவர்களுக்கு பா.ஜ., அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதனையொட்டி பா.ஜ., முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் செண்பகா ஓட்டலில் நடந்தது. பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம், பா.ஜ.,மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., என்.ஆர்.காங்., மாநில செயலாளர் ஜெயபால், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், சாய்சரவணன்குமார், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,கள் ரமேஷ், பாஸ்கர், சிவசங்கர், லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பா.ஜ.,வின் முகவர்கள் அனைவரும் 6:30 மணிக்கு சரியாக ஓட்டு எண்ணும் மையத்திகுள் இருக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை வேறு எங்கும் செல்ல கூடாது. ஓட்டு எண்ணிக்கை முடிந்து சான்றிதழ் பெறும் வரை ஏஜென்ட்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.
ஓட்டு எண்ணிக்கை சந்தேகம், மாற்று கட்சிகள் எதிர்ப்பு இருந்தால் சண்டை போடக் கூடாது. அதே நேரத்தில் அங்குள்ள ஓட்டு எண்ணிக்கை அதிகாரிகளிடம் அழுத்தம் திருத்தமாக எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.