ADDED : ஜூலை 02, 2024 05:16 AM
புதுச்சேரி: லோக்சபாவில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது ராகுல் பேசியதை புதுச்சேரி பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது.
பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., விடுத்துள்ள அறிக்கை:
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியது, இந்துக்கள் மீதான தனது காழ்ப்புணர்ச்சியை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளது.
சிறுபான்மையினரை திருப்தி படுத்தும் அரசியலை காங்., பல ஆண்டுகளாக பின்பற்றி வருகிறது. லோக்சபா தேர்தலில் காங்., நினைத்த வெற்றி பெறவில்லை. இந்துக்கள் ஒன்று சேர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்தனர்.
அந்த காழ்ப்புணர்ச்சியில் லோக்சபாவில், ராகுல் இந்துக்கள் மீதான வெறுப்புணர்வை விதைத்துப் பேசியுள்ளார்.
கடவுளின் முத்திரைகளை போலத்தான் காங்., தேர்தல் சின்னம் இருப்பதாக அவர் தத்துவம் பேசி இருப்பது கண்டனத்திற்குறியது. இனி ஆட்சி அதிகாரத்தை காங்., பெற முடியாது. இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் ராகுல் பேச தொடங்கி இருக்கிறார்.
இந்துக்களை அவமதித்து பேசிய அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவருடைய கருத்தை புதுச்சேரி பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.