Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக்குகள் மோதல் ஐ.டி.ஐ., மாணவர் பலி 

பைக்குகள் மோதல் ஐ.டி.ஐ., மாணவர் பலி 

பைக்குகள் மோதல் ஐ.டி.ஐ., மாணவர் பலி 

பைக்குகள் மோதல் ஐ.டி.ஐ., மாணவர் பலி 

ADDED : ஜூன் 22, 2024 05:48 PM


Google News
Latest Tamil News
பாகூர்: பாகூர் அருகே பைக்குகள் மோதிய விபத்தில், படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாகூர் அடுத்த தமிழக பகுதியான கரைமேடு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் 50; கூலி தொழிலாளி. இவரது மகன் ராகவன் 19; கடலுாரில் ஐ.டி.ஐ., படித்தார்.

ராகவனின் அண்ணிக்கு நேற்று முன்தினம் இரவு குருவிநத்தம் கிராமத்தில் உள்ள ராஜிவ்காந்தி திருமண மண்டபத்தில் வளைகாப்பு நடந்தது. வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக, ராகவன் தனது சித்தப்பா சிவா மகன் இளம்பரிதி, 15; என்பவரை அழைத்து கொண்டு ஹோண்டா ைஷன் பைக்கில் பாகூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

குருவிநத்தம் மாஞ்சாலை சாலையில் சென்றபோது, எதிரே யமஹா எம்.டி பைக்கில் அதிவேகமாக வந்த வாலிபர், பைக் மீது மோதினார். படுகாயமடைந்த ராகவன் மற்றும் இளம்பரிதி ஆகியோர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ராகவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளம்பரிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து ஏற்படுத்திய கடலுார் வெள்ளப்பாகத்தைச் சேர்ந்த பரசுராமன் 25; வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ஏட்டு செல்வ விநாயகம் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us