ADDED : ஜூலை 13, 2024 06:13 AM
புதுச்சேரி: திருமண மண்டபத்தின் முன் நிறுத்தி இருந்த பைக்கை காணவில்லை.
கரிக்கலாம்பாக்கம், புது நகரைச் சேர்ந்தவர் அருண், 31; திருமண நிகழ்ச்சிக்கு மணமேடை அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 6ம் தேதி காலை 11:30 மணியளிவில், அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் திருமண நிலையத்திற்கு அலங்காரம் செய்யும் பணிக்காக பைக்கில் சென்றார்.
பைக்கை மண்டபம் பார்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு, வேலையை முடித்துவிட்டு மாலை 4:00 மணியளவில் வந்து பார்த்தபோது பைக் காணவில்லை.
புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.