ADDED : ஜூலை 22, 2024 01:47 AM
புதுச்சேரி : தனியார் வங்கி மேலாளர் பைக்கை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உறுவையாறு ராமச்சந்திரா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 35; தனியார் வங்கி மேலாளர்.
இவர் கடந்த 10ம் தேதி இரவு 9:45 மணியளவில் தனக்கு சொந்தமான பைக்கை வீட்டின் எதிரில் நிறுத்திவிட்டு துாங்கச் சென்றார். மறுநாள் காலை பார்த்தபேது பைக் காணவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.