/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தடுப்பு சுவரில் பைக் மோதல் வாலிபர் பலி தடுப்பு சுவரில் பைக் மோதல் வாலிபர் பலி
தடுப்பு சுவரில் பைக் மோதல் வாலிபர் பலி
தடுப்பு சுவரில் பைக் மோதல் வாலிபர் பலி
தடுப்பு சுவரில் பைக் மோதல் வாலிபர் பலி
ADDED : ஜூலை 03, 2024 05:42 AM
விழுப்புரம் : சாலை தடுப்பு சுவரில் பைக் மோதியதில் வாலிபர் இறந்தார்.
விழுப்புரம் அடுத்த தளவானுாரை சேர்ந்தவர் பழனி மகன் சீனுவாசன், 22; இவர் நேற்று அதேபகுதியை சேர்ந்த தனது நண்பர் அய்யப்பன் மகன் நரேஷ்குமார், 25; என்பவருடன் புதுச்சேரியில் இருந்த விழுப்புரத்திற்கு பைக்கில் புறப்பட்டார். பைக்கை, சீனுவாசன் ஓட்டினார்.
கொளத்துார் கூட்ரோடு அருகே வந்தபோது, கட்டுப் பாட்டை இழந்த பைக், சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது.
அதில் படுகாயமடைந்த சீனுவாசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த நரேஷ்குமார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.