/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கண்டக்டருக்கு பீர் பாட்டில் குத்து கண்டக்டருக்கு பீர் பாட்டில் குத்து
கண்டக்டருக்கு பீர் பாட்டில் குத்து
கண்டக்டருக்கு பீர் பாட்டில் குத்து
கண்டக்டருக்கு பீர் பாட்டில் குத்து
ADDED : ஜூலை 24, 2024 06:41 AM
புதுச்சேரி : முன் விரோதத்தில் பஸ் கண்டக்டரை பீர் பாட்டிலால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கீழுர் அடுத்த சிவராந்தகம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய்குமார், 23; தனியார் பஸ் கண்டக்டர். இவர் நேற்று பணிக்கு செல்வதற்காக அரியூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த அரியூரைச் சேர்ந்த விஜி, 21, அவரது சகோதரர் ஆகியோர் சஞ்சய்குமாரை பீர்பாட்டிலால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடினர்.
ரத்த வெள்ளத்தி்ல சுருண்டு விழுந்த சஞ்சய்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.