/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலையில் பேனர் சப் கலெக்டர் புகார் சாலையில் பேனர் சப் கலெக்டர் புகார்
சாலையில் பேனர் சப் கலெக்டர் புகார்
சாலையில் பேனர் சப் கலெக்டர் புகார்
சாலையில் பேனர் சப் கலெக்டர் புகார்
ADDED : ஜூலை 25, 2024 11:09 PM
புதுச்சேரி: சாலையில் பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சப் கலெக்டர் போலீசில் புகார் செய்தார்.
புதுச்சேரியில் பல இடங்களில் அரசியல் கட்சியினர் அனுமதியின்றி பேனர் வைத்து வருகின்றனர். அதனால், விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், வள்ளலார் சாலை நடைபாதையில், அனுமதியில்லாமல் சிலர் பேனர் வைத்துள்ளனர்.
இதையடுத்து பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் பெரியக்கடை போலீசில், நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.