ADDED : ஜூலை 21, 2024 05:48 AM
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு செங்கேணி மாரியம்மன் கோவிலில் 501 பால் குட அபிஷேகம் இன்று நடக்கிறது.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் செங்கேணி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடி பவுர்ணமியை முன்னிட்டு, 16ம் ஆண்டு 501 பால் குட அபிஷேகம் இன்று ( 21ம் தேதி) நடக்கிறது.
இதையொட்டி, காலை 6:00 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் நவதுர்கா ஹோமம், சங்கராபரணி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகத்துடன் 501 பால் குடங்கள் மாட வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து, காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இரவு 9:00 மணிக்கு செங்கேணி மாரியம்மன் ஊஞ்சல் உற்சவம், கும்பம் படைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.