/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாகூர் மூலநாதர் கோவில் தேர் திருவிழா பாகூர் மூலநாதர் கோவில் தேர் திருவிழா
பாகூர் மூலநாதர் கோவில் தேர் திருவிழா
பாகூர் மூலநாதர் கோவில் தேர் திருவிழா
பாகூர் மூலநாதர் கோவில் தேர் திருவிழா
ADDED : ஜூன் 20, 2024 09:05 PM

பாகூர் : பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், தேர் திருவிழா நேற்று நடந்தது.
பாகூரில் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் பல்லக்கில் சந்திரசேகரர் புறப்பாடும், இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 16ம் தேதி பாரிவேட்டையும், 18 ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்திருவிழா நேற்று நடந்தது.
காலை 6.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 8.58 மணிக்கு கவர்னர் ராதாக்கிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமி, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி மாட வீதிகளில் தேரில் வலம் வந்து பக்தர்கர்ளுக்கு அருள் பாலித்தார்.
விழாவில், இந்து சமய அறநிலைய துறை ஆணையர் சிவசங்கரன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் மற்றும் பாகூர், சேலியமேடு, குருவிநத்தம், பரிக்கல்பட்டு, கன்னியக்கோவில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.
விழா ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி வட்டாச்சியர் கோபாலக்கிருஷ்ணன், செயல் அலுவலர் பாலமுருகன், அர்ச்சகர்கள் சங்கர நாராயணன், பாபு மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.