Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆட்டோ டிரைவர் மகள் நீட் தேர்வில் தேர்ச்சி உதவிக்காக காத்திருப்பு

ஆட்டோ டிரைவர் மகள் நீட் தேர்வில் தேர்ச்சி உதவிக்காக காத்திருப்பு

ஆட்டோ டிரைவர் மகள் நீட் தேர்வில் தேர்ச்சி உதவிக்காக காத்திருப்பு

ஆட்டோ டிரைவர் மகள் நீட் தேர்வில் தேர்ச்சி உதவிக்காக காத்திருப்பு

ADDED : ஜூன் 09, 2024 03:09 AM


Google News
Latest Tamil News
வானுார் : நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆட்டோ டிரைவரின் மகள், மேற்படிப்புக்கு உதவி கரம் கிடைக்குமா என காத்திருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார்,55; ஆட்டோ டிரைவர். இவரது மூத்த மகள் மம்தா, 17; திண்டிவனத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் படித்த இவர், பிளஸ் 2 தேர்வில் 600க்கு 579 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார்.

சிறு வயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற இலக்கு கொண்ட இவர், விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் சேர்ந்து படித்து நீட் தேர்வு எழுதினார்.

இத்தேர்வில் 720க்கு 558 மதிப்பெண் பெற்றுள்ள இவர், அரசு கல்லுாரியில் சீட் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் காத்துக் கொண்டுள்ளார்.

மேலும் வறுமை காரணமாக தனது படிப்பிற்கு எவரேனும் உதவி புரிய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உதவிக்காக காத்திருக்கிறார். இவரது படிப்பிற்கு உதவுவோர் 63801 07964 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us