/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொலை முயற்சி வழக்கு: 2 பேருக்கு சிறை கொலை முயற்சி வழக்கு: 2 பேருக்கு சிறை
கொலை முயற்சி வழக்கு: 2 பேருக்கு சிறை
கொலை முயற்சி வழக்கு: 2 பேருக்கு சிறை
கொலை முயற்சி வழக்கு: 2 பேருக்கு சிறை
ADDED : ஜூன் 13, 2024 08:20 AM
விழுப்புரம், :முன் விரோதத்தில், மாணவரை ஜாதி பெயரை கூறி திட்டி, கொலை செய்ய முயன்ற இருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் அடுத்த சொர்ணாவூர் மேல்பாதியை சேர்ந்தவர் வெங்கட்குமார் மகன் அருண், 20; இவர், கடந்த 2015ம் ஆண்டு, ராம்பாக்கம் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்தபோது, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இதன் காரணமாக, கடந்த 20.3.2015ம் தேதி பைக்கில் சென்ற அருணை, அதே ஊரை சேர்ந்த ரவிக்குமார்,35; யுவராஜ் (எ) குபேந்திரன்,37; உள்ளிட்டோர் வழிமறித்து தாக்கினர்.
இது குறித்து, வெங்கடகுமார், அருண் ஆகியோர் நேரில் சென்று, ரவிக்குமார் தரப்பினரை தட்டிகேட்டனர்.
அப்போது, அவர்கள் இவரையும், சாதி பெயரைசொல்லி திட்டி, தாக்கி, அருணை கொலை செய்ய முயன்றனர்.
இதுகுறித்து வெங்கட்குமார் அளித்த புகாரின் பேரில், ரவிக்குமார், யுவராஜ் ஆகியோரை கைது செய்த வளவனுார் போலீசார், இருவர் மீதும் விழுப்புரம் சிறப்பு கோர்ட்டில் கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்பு பிரிவில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், யுவராஜிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.