ADDED : ஜூன் 24, 2024 05:30 AM
திருக்கனுார் : கொடாத்துாரில் நடந்த சுவாமி வீதியுலா ஏற்பட்ட தகராறை தடுக்க சென்ற கல்லுாரி மாணவனை தாக்கிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடாத்துார் பெரியபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழரசன், 20; தாகூர் கலை கல்லுாரியில் பி.ஏ., மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.
அப்பகுதியில் நடக்கும் கோவில் திருவிழாவின் முதல்நாள் இரவு சுவாமி வீதியுலாவின் போது, அதே கிராமத்தை சேர்ந்த சத்தியசீலன், கலையரசன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதனை கண்ட தமிழரசன் தடுக்க சென்றபோது, கோபமடைந்த கலையரசன், 27; தமிழரசனை தகாத வார்த்தைகளால் திட்டி, இரும்பு பைப்பால் தாக்கியுள்ளார். மேலும், தமிழரசனின் அண்ணன் கூத்தன் என்பவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழரசன் அளித்த புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.