/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தடகள வீரர்கள் முதல்வரிடம் கோரிக்கை மனு தடகள வீரர்கள் முதல்வரிடம் கோரிக்கை மனு
தடகள வீரர்கள் முதல்வரிடம் கோரிக்கை மனு
தடகள வீரர்கள் முதல்வரிடம் கோரிக்கை மனு
தடகள வீரர்கள் முதல்வரிடம் கோரிக்கை மனு
ADDED : ஜூலை 22, 2024 01:45 AM

புதுச்சேரி : புதுச்சேரியில்விளையாட்டு பயிற்சியாளர்களின் பணி நிரந்தரம் தொடர்பாக, முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில், விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. தற்போது பயிற்சியாளர்களில், 28 பேரை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த தடகள வீரர், வீராங்கனையர், 100க்கும் மேற்பட்டோர், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில், காரைக்கால் பகுதி தடகள பயிற்சியாளர்கள், கடந்த 8 ஆண்டுகளாக எங்களை பல்வேறு போட்டிகளுக்கு தயார் செய்து, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வைத்தனர். ஆனால் பயிற்சியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு இல்லாமல், பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்துமுதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் ரங்கசாமி, அவர்களிடம், 'பயிற்சியாளர்களுக்கு, பணி நிரந்தரம் அளிப்பதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. இது சம்மந்தமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.