ADDED : ஜூலை 04, 2024 03:32 AM
புதுச்சேரி : திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரியாக தலைமை ஆசிரியர் சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில் காமாட்சி மீனாட்சி சமேத கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் நிர்வாக அதிகாரியாக, திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான ஆணையை இந்து அறநிலையத்துறை சார்பு செயலர் சிவசங்கரன் பிறப்பித்துள்ளார்.