/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிப்மர் பிஎச்.டி., படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு ஜிப்மர் பிஎச்.டி., படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ஜிப்மர் பிஎச்.டி., படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ஜிப்மர் பிஎச்.டி., படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ஜிப்மர் பிஎச்.டி., படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூன் 03, 2024 05:26 AM
புதுச்சேரி, : ஜிப்மரில் பிஎச்.டி., படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் பயோகெமிஸ்ட்ரி-2, சமூக மருத்துவம்-1, மருத்துவ புற்று நோயியல், மகப்பேறியல் துறைகளில் மொத்தம் 5 பிஎச்.டி., சீட்டுகள் உள்ளன. இதில் சேரும் மாணவர்களுக்கு உதவி தொகையாக மூன்று ஆண்டுகள் வரை மாதம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மூன்று ஆண்டிற்குள் பிஎச்.டி., முடிக்கவில்லையெனில் மேலும் இரண்டு ஆண்டுகள் தொடரலாம். அந்த இரண்டு காலத்திற்கும் உதவித் தொகை பொருந்தும்.
இந்த இடங்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் ஜிப்மரின் www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது. வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளுக்கான நுழைவு தேர்வு ஜூலை 7ம் தேதி காலை 9:00 மணி முதல் 10.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டுகள் வரும் 29ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நுழைவு தேர்வுகள் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, டில்லி, புதுச்சேரி உள்ளிட்ட ஆறு மையங்களில் நடத்தப்படும். ஜூலை 22ம் தேதி முன்பாக பிஎச்.டி., நுழைவு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என, ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.