/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ மருத்துவமனை டாக்டர் வரும் 8ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை அப்போலோ மருத்துவமனை டாக்டர் வரும் 8ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை
அப்போலோ மருத்துவமனை டாக்டர் வரும் 8ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை
அப்போலோ மருத்துவமனை டாக்டர் வரும் 8ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை
அப்போலோ மருத்துவமனை டாக்டர் வரும் 8ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை
ADDED : ஜூன் 06, 2024 03:10 AM
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் வரும் 8 தேதி புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.
சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பு நரம்பியல் சிகிச்சை நிபுணர் ஸ்ரீகாந்த் சீனிவாசன், மூப்பியல் மருத்துவத்துறை டாக்டர் பிரியங்கா ராணா பத்கிரி ஆகியோர் வரும் 8 தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி100 அடி சாலையில், என்.டி., மகால் எதிரில் உள்ள அப்போலா மருத்துவமனை தகவல் மையத்தில் வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளனர்.
நரம்பியல் சிகிச்சை நிபுணர் ஸ்ரீகாந்த் சீனிவாசன், தலைவலி, மூளை தாக்கம், மயக்கம், துாக்கம் கலைதல், வலிப்பு, கிறுகிறுப்பு, தலைசுற்றல், மறதி பிரச்னை, மயக்க நிலை, நடப்பதில் தடுமாற்றம் அல்லது சிரமம், நடுக்குவாதம், சுய உணர்வு இழத்தல், கழுத்து வலி, சிறு நடுக்கம், கீழ் முதுகு வலி, கை கால்களில் எரிவது அல்லது குத்துவது போன்ற பிரச்னைகளுக்கு ஆலோசனை பெறலாம்.
டாக்டர் பிரியங்கா ராணா பத்கிரியிடம், எலும்பு மெலிதல், எலும்புகள் மென்மையாதல் அல்லது பலவீனமாதல், வீழ்தல் மற்றும் மயக்க நிலை, தலை சுற்றல், நினைவாற்றல் குறைதல், குழப்பம், முதுமையில் ஏற்படும் மறதி, தடுமாற்றம், உளச்சோர்வு, உணவு முறை ஆலோசனை, நோய் தொற்றுகளை தடுப்பதற்கான தடுப்பூசி, உடல் இயக்க பயிற்சி, சமநிலைப் பிரச்னைகள், தடுமாற்றம் போன்ற பிரச்னைகளுக்கு ஆலோசனை பெறலாம்.
முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.