/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 04, 2024 11:53 PM

வில்லியனுார்: வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு சுகாதார மேற்பார்வையாளர் சாயிராபானு முன்னிலை வகித்தார். முன்னதாக சுகாதார ஆய்வாளர் ஷியாம் சுந்தர் வரவேற்றார்.
ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி பாமகள்கவிதை தலைமை தாங்கி, புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள், அதனால் ஏற்படும் நோய்கள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும். மேலும் பிள்ளைப் பருவத்தில் இருந்து புகையிலை நோயால் பாதிக்கப்படும் மக்கள் குறித்த படங்களுடன் விளக்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார செவிலியர்கள் மேரி ரோஸ்லின், விஜயலட்சுமி, கார்த்திகா, மடோனா மற்றும் சுகாதார ஆய்வாளர் மரியஜோசப் ஆகியோர் செய்தனர். 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
சுகாதார மேற்பார்வையாளர் மதிவதனன் நன்றி கூறினார்.