sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஊழல் எதிர்ப்பு செயல்பாட்டு குழு புதுச்சேரியில் துவக்கம்

ஊழல் எதிர்ப்பு செயல்பாட்டு குழு புதுச்சேரியில் துவக்கம்

ஊழல் எதிர்ப்பு செயல்பாட்டு குழு புதுச்சேரியில் துவக்கம்


ADDED : மே 01, 2024 09:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2024 09:01 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : புதுச்சேரியில், தேசிய ஊழல் எதிர்ப்பு மற்றும் செயல்பாட்டு குழுவின் துவக்க விழா நடந்தது.

செண்பகா ேஹாட்டலில் நடந்த விழாவிற்கு, ஊழல் எதிர்ப்பு செயல்பாட்டு குழுவின் தேசிய தலைவர் ராஜேஷ் சுக்லா தலைமை தாங்கி, குழுவை துவக்கி வைத்தார். புதுச்சேரி மாநில தலைவரும், ஆல்பா கல்விக் குழும நிறுவனருமான பாஷிங்கம் முன்னிலை வகித்தார்.

விழாவில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

விழாவில், தேசிய தலைவர் ராஜேஷ் சுக்லா பேசுகையில், 'ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் குறித்த புகார் வந்தால், ஊழல் நடப்பது தெரிய வந்தால் உடனே உறுப்பினர்கள் அதனை தடுக்க வேண்டும்' என்றார்.

குழுவின் புதுச்சேரி தலைவர் பாஷிங்கம் பேசுகையில், 'ஊழல் நாட்டுக்கு கேடு. ஊழல் தடுப்பை நம் குடும்பத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு முதலில் இதனை கற்றுத்தர வேண்டும். ஊழலை நாம் தடுத்தால் நாடு முன்னேற்றம் அடையும்' என்றார்.

விழாவில் நிர்வாகிகள் செல்வம், ஓம்பிரகாஷ் போர்வால், டாக்டர் நவீன்தியாகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us