/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அனைத்து அரசு துறை விசாரணைகளையும் வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் லஞ்ச ஒழிப்பு துறை 'கிடுக்கிபிடி' உத்தரவு அனைத்து அரசு துறை விசாரணைகளையும் வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் லஞ்ச ஒழிப்பு துறை 'கிடுக்கிபிடி' உத்தரவு
அனைத்து அரசு துறை விசாரணைகளையும் வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் லஞ்ச ஒழிப்பு துறை 'கிடுக்கிபிடி' உத்தரவு
அனைத்து அரசு துறை விசாரணைகளையும் வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் லஞ்ச ஒழிப்பு துறை 'கிடுக்கிபிடி' உத்தரவு
அனைத்து அரசு துறை விசாரணைகளையும் வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் லஞ்ச ஒழிப்பு துறை 'கிடுக்கிபிடி' உத்தரவு
ADDED : ஜூன் 24, 2024 05:38 AM
புதுச்சேரி, : அரசு ஊழியர்கள் மீதான அனைத்து விசாரணை அறிக்கையை வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறை உத்தரவிட்டுள்ளது. .
புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மீது முறைகேடு உள்பட பல்வேறு பிரச்னைகள் எழும்போது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்படுகிறது. இதற்கான தனியாக விசாரணை அதிகாரியும் நியமித்து அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அந்த அறிக்கை கவர்னரின் பார்வைக்கு சென்று மேல் நடவடிக்கையும் எடுக்கப்படுகின்றது.
இந்த விசாரணை அறிக்கையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. தலைமை செயலர் சரத் சவுகான் அறிவுறுத்தலின்படி லஞ்ச ஒழிப்பு துறை அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ளது.
சுற்றறிக்கை:
தலைமை செயலர் விஜிலென்ஸ் பிரிவை மதிப்பாய்வு செய்யும் போது, தலைமை விஜிலென்ஸ் அலுவலகம் அனுப்பிய 150க்கும் மேற்பட்ட புகார்களின் உண்மை விசாரணை அறிக்கைகள் இன்னும் நிர்வாகச் செயலர்களிடம் இருந்து வரவில்லை .
மேலும், அனைத்து நிர்வாகச் செயலாளர்கள் புகார்களை சரியான நேரத்தில் மற்றும் திறம்பட தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, ஆய்வின் கீழ் உள்ள அனைத்து புகார்களையும் நிர்வாகச் செயலாளர்கள் உடனடியாக தீர்த்து வைத்து வரும் 30ம் தேதிக்குள் தலைமை விஜிலென்ஸ் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
அத்துடன் தலைமை விஜிலென்ஸ் அலுவலகத்தால் அனுப்பப்படும் புகார்களைத் திறம்படச் சமாளிப்பதற்கு, அனைத்து நிர்வாகச் செயலர்களும், துறை தலைவருக்கு அடுத்த நிலையில் ஒருவரைத் தலைவராகவும், இரண்டாவது மூத்த அதிகாரியை உறுப்பினராகவும் கொண்டு ஒரு குழுவை அமைக்க வேண்டும். மேலும் துறைத் தலைவர் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கூட்டத்தை நடத்த வேண்டும். நிர்வாகச் செயலர் முறையான தீர்வுக்காக கண்காணிப்பு மற்றும் சட்ட விஷயங்கள் குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.