/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதல்வரை சந்திக்க ஏ.ஐ.டி.யூ.சி., முடிவு முதல்வரை சந்திக்க ஏ.ஐ.டி.யூ.சி., முடிவு
முதல்வரை சந்திக்க ஏ.ஐ.டி.யூ.சி., முடிவு
முதல்வரை சந்திக்க ஏ.ஐ.டி.யூ.சி., முடிவு
முதல்வரை சந்திக்க ஏ.ஐ.டி.யூ.சி., முடிவு
ADDED : ஜூலை 22, 2024 01:43 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாநில கட்டடக் கலை சங்கத்தின் ஏ.ஐ.டி.யூ.சி., பொதுக்குழு கூட்டம் முதலியார்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்தது.
சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி பொதுச் செயலாளர் சேது செல்வம், கூட்டத்தின் முடிவுகளை விளக்கி பேசினார்.
ஏ.ஐ.டி.யூ.சி., கவுரவ தலைவர் அபிஷேகம், பொருளாளர் அந்தோணி, எதிர்கால பணிகள் குறித்து பேசினார்.
பொதுச் செயலாளர் சந்திரசேகரன், நடைபெற்ற வேலைகள், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார். மாநில நிர்வாகி கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 'வரும், 30ம் தேதி தியாகிகள் தினத்தில், சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்துவது.
ஆலங்குப்பம் பகுதியில் மின் கம்பம் தலையில் விழுந்து இறந்த கட்டட தொழிலாளி அவினாஷ் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு ரூ.25 லட்சம் நிதி வழங்கிட வேண்டும். அவர் குடும்பத்தில் ஒருவருக்கு முதல்வர் அரசு வேலை வழங்க வேண்டும்.
கட்டடம் மற்றும் கட்டு மான தொழிலாளர் நல வாரியம் செயல்பாடுகள் மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பாக, முதல்வரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்' என முடிவு செய்யப்பட்டது.
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.