/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தமிழ் மொழி மீது அரசுக்கு அக்கறை இல்லை அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு தமிழ் மொழி மீது அரசுக்கு அக்கறை இல்லை அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
தமிழ் மொழி மீது அரசுக்கு அக்கறை இல்லை அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
தமிழ் மொழி மீது அரசுக்கு அக்கறை இல்லை அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
தமிழ் மொழி மீது அரசுக்கு அக்கறை இல்லை அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
ADDED : மார் 14, 2025 04:24 AM
புதுச்சேரி: காங்., கட்சியுடன் தி.மு.க., கூட்டணி வைத்துக் கொண்டு மும்மொழியை பற்றி பேசுவது கடைந்தெடுத்த நாடகம் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை ஆரம்பத்தில் ஆதரித்த தி.மு.க., - காங்., கட்சியினர் இன்று, மும்மொழிக் கொள்கை என மாணவர்களை துாண்டிவிட்டு தங்கள் இயலாமையை மூடி மறைத்துள்ளன..
புதுச்சேரியில் கடந்த 7 ஆண்டிற்கு முன்பே ஒன்று முதல் 5ம் வகுப்புவரை மும்மொழி பாடத்திட்டம் வந்துவிட்டது. புதிய தேசிய கல்வி கொள்கை 2 ஆண்டுகளுக்கு முன் வந்துவிட்டது. தற்போது, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.
புதிய தேசிய கல்வி கொள்கை விவகாரத்தில் தி.மு.க., - காங்., கட்சிகள் சட்டசபையில் நாடகமாடுவது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் இந்தியை திணித்தது காங்., அரசு. அதை விரட்டியடித்தவர் அண்ணாதுரை. அப்படிப்பட்ட காங்., கட்சியுடன் தி.மு.க., கூட்டணி வைத்துக் கொண்டு மும்மொழியை பற்றி பேசுவது கடைந்தெடுத்த நாடகம்.
புதுச்சேரியில் பல பள்ளிகளில் தமிழ் கட்டாய படமாக இல்லை. தமிழ் படிக்காமல் பல மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதி வருகின்றனர். தமிழ் மொழி மீது இந்த அரசுக்கும், தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கும் அக்கறை இருந்தால் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அரசுத் துறையில் பணி என்ற சட்டத்தை கொண்டு வர முடியுமா?
குறைந்தபட்டசம் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தால் அ.தி.மு.க., ஆதரிக்கும். புதுச்சேரி நகர போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 20 ஆண்டிற்கு முன் பிரதான கழிவு நீர் உப்பனாற்றின் மீது பாலம் கட்டும் பணி துவங்கியது. ஆட்சியாளர்களின் மெத்தனம், அதிகாரிகளின் அலட்சியம், ஒப்பந்ததாரர்களின் சுயநலத்தால் கூடுதலாக ரூ.60 கோடி செலவிடப்பட்டது. அதில் பெரும்பகுதி ஒப்பந்ததாரர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
அரசை எதிர்த்து கூடுதல் பணம் கேட்டு வழக்குக்கு சென்றுள்ள ஒப்பந்ததாரரிடமே சுமார் ரூ.30 கோடி அளவில் பணியை முடிக்க மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.
ஒரே பணியில் அரசை எதிர்த்து ஆர்பிட்டேஷன் முறையில் கூடுதல் தொகை கேட்டு வழக்கு பதிவு செய்துள்ள நபருக்கே, அதே பணியை வழங்குவது இந்தியாவிலேயே இதுதான் முதன் முறை.
இவ்வாறு அவர் கூறினார்.