/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏ.எப்.டி., மைதானத்தில் பஸ் நிலையம் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் ஏ.எப்.டி., மைதானத்தில் பஸ் நிலையம் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
ஏ.எப்.டி., மைதானத்தில் பஸ் நிலையம் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
ஏ.எப்.டி., மைதானத்தில் பஸ் நிலையம் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
ஏ.எப்.டி., மைதானத்தில் பஸ் நிலையம் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜூன் 16, 2024 05:51 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று முதல் தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு கிழக்கு போக்குவரத்து போலீஸ் கண்காணிப்பாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உருளையன்பேட்டை, மறைமலை அடிகள் சாலையில் உள்ள பஸ் நிலையத்தில், கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. அப்பணிகள் முடியும் வரை, கடலுார் சாலையில் உள்ள ஏ.எப்.டி., மைதானத்தில் இருந்து, இன்று காலை 6:00 மணி முதல் பஸ்கள் இயக்கப்படும் என, புதுச்சேரி நகராட்சி அறிவித்துள்ளது.
இதையொட்டி, பொதுமக்களின் நலன் கருதி தற்காலிமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 6:00 மணி முதல், அனைத்து பஸ்களையும், ஏ.எப்.டி., மைதானத்தில் இருந்து இயக்க வேண்டும்.
அந்த மைதானத்தில் இருந்து வெளிவரும் சென்னை, திண்டிவனம் மற்றும் விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள், பாண்டி - கடலுார் சாலையில் வலது புறம் திரும்பி சென்று மறைமலை அடிகள் சாலையில் இடதுபுறம் திரும்பி வழக்கமாக செல்லவும்.
கடலுார் மார்க்கமாக செல்லும் பஸ்கள், பாண்டி - கடலுார் சாலையில், இடதுபுறம் திரும்பி வழக்கமாக செல்லவும். அதனால் முதலியார்பேட்டை ரயில்வே கிராசிங்கில் கேட் போடப்பட்டு இருக்கும் சமயத்தில், கடலுார் மார்க்கமாக செல்ல வேண்டிய பஸ்கள், கடலுார் சாலையில் வலது புறம் திரும்பி சென்று மறைமலை அடிகள் சாலையில் இடதுபுறம் திரும்பி, புவன்கரே சாலை வழியாக இந்திரா சதுக்கம் சென்று 100 அடி சாலை வழியாக கடலுார் செல்லவும்.
கடலுார் சாலையில் வெங்கட சுப்பரெட்டி சதுக்கத்திலிருந்து, முதலியார் பேட்டை ரயில்வே கேட் வரை உள்ள சாலையின் இரு புறங்களிலும் எந்தவித வாகனங்களையும் தற்காலிகமாக நிறுத்தக்கூடாது.
காத்திருப்பு நேர பஸ்கள், மறைமலை அடிகள் சாலையில் வெங்கட சுப்பரெட்டி சதுக்கத்திற்கு அருகில் உள்ள பழைய திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நிறுத்தி, அவரவர் நேரத்துக்கு ஏற்றார் போல் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு செல்லவும்.
ஏ.எப்.டி மைதானத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் அந்தந்த ஊர் மார்க்கமாக செல்ல வேண்டிய பஸ்களுக்காக, ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். ஆட்டோ, டெம்போ மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை அவற்றிற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்.
இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.