/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குறை தீர்ப்பு முகாம்: கலெக்டர் பார்வை குறை தீர்ப்பு முகாம்: கலெக்டர் பார்வை
குறை தீர்ப்பு முகாம்: கலெக்டர் பார்வை
குறை தீர்ப்பு முகாம்: கலெக்டர் பார்வை
குறை தீர்ப்பு முகாம்: கலெக்டர் பார்வை
ADDED : ஜூலை 07, 2024 03:57 AM

திருக்கனுார்: வில்லியனுார் சப் கலெக்டர் தெற்கு வருவாய்த் துறைசார்பில், கூனிச்சம்பட்டு அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்கள் குறைத்தீர்ப்பு முகாம் நேற்று நடந்தது.
முகாமை கலெக்டர் குலோத்துங்கன் பார்வையிட்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.தொடர்ந்து, வருவாய் துறை மூலம் சான்றிதழ்கள் மற்றும் வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவிற்கான கடன் உதவியை வழங்கினார். முகாமில், வில்லியனுார் சப் கலெக்டர் சோமசேகர அப்பாராவ் கொட்டாரு, தாசில்தார் சேகர், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், வருவாய் ஆய்வாளர் ஜெயபாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில், திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை மூலம் ஆதார் பெயர், முகவரி, மொபைல் எண் திருத்தம் உள்ளிட்ட சேவைகள், சுகாதாரத் துறை மூலம் மருத்துவ சிகிச்சைகள், கொம்யூன் பஞ்சாயத்து மூலம் வரிவசூல், புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணையம் மூலம் பொதுமக்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகள் அளிக்கப்பட்டன. இதில்,பொது மக்களிடம் இருந்து நேரடியாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டன.