/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இங்கிலாந்து திறன் கல்வி குழு நிறுவனத்துடன் ஆதித்யா கல்வி குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம் இங்கிலாந்து திறன் கல்வி குழு நிறுவனத்துடன் ஆதித்யா கல்வி குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இங்கிலாந்து திறன் கல்வி குழு நிறுவனத்துடன் ஆதித்யா கல்வி குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இங்கிலாந்து திறன் கல்வி குழு நிறுவனத்துடன் ஆதித்யா கல்வி குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இங்கிலாந்து திறன் கல்வி குழு நிறுவனத்துடன் ஆதித்யா கல்வி குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஜூன் 22, 2024 04:21 AM

புதுச்சேரி : ஆதித்யா கல்வி குழும மாணவர்கள் ஆங்கிலத்தில் உலகளாவிய தரத்தில் அங்கீகாரம பெற்ற சான்றிதழ்களை பெற, இங்கிலாந்தில் திறன் மற்றும் கல்வி குழு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஆதித்யா கல்வி குழும மாணவர்கள் ஆங்கிலத்தில் உலகளாவிய தரத்தில் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களை பெற, இங்கிலாந்து திறன் கல்வி குழு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் புரிந்து, ஆவணங்களை பரிமாறிக்கொள்ளப்பட்டன.
ஆதித்யா மேலாண் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திறன்கள் மற்றும் கல்வி குழுமத்தின் துணை தலைமை அதிகாரி ஸ்காட் போர்ப்ஸ், கல்வி குழுமத்தின் முதன்மை ஆலோசகர் ஜோய் ஜோதி நந்தி பங்கேற்றனர்.
அவர்களை, ஆதித்யா கல்வி குழும நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீவித்யா நாராயணா கல்வி அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
துணை தலைமை அதிகாரி ஸ்காட் போர்ப்ஸ், கல்வி குழுமத்தின் முதன்மை ஆலோசகர் ஜோய் ஜோதி நந்தி கூறும்போது, எங்களுடைய அமைப்பின் வாயிலாக கற்கும் மாணவர்கள் உலகளாவிய தரத்தின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களை பெறலாம். இதன் மூலம் அவர்கள் தங்கள் மேற்படிப்பு, வேலைவாய்ப்பிற்கு உலகின் எந்த பகுதிக்கும் செல்லலாம்.
ஆதித்யா வித்யாஷ்ரமம் திறன் மற்றும் கல்வி குழுவின் அங்கீகரிக்கப்பட்ட மையமாக இருப்பதால் 11 வயது முதல் 21 வயது வரை, அதாவது ஆரம்பம் முதல் கல்லுாரி வரையிலான மாணவர்களுக்கு இந்த படிப்பினை வழங்கும் என குறிப்பிட்டனர்.
விழாவில் ஆதித்யா பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.