Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரைக்காலுக்கு கூடுதல் நிதி; அமைச்சர் வலியுறுத்தல்

காரைக்காலுக்கு கூடுதல் நிதி; அமைச்சர் வலியுறுத்தல்

காரைக்காலுக்கு கூடுதல் நிதி; அமைச்சர் வலியுறுத்தல்

காரைக்காலுக்கு கூடுதல் நிதி; அமைச்சர் வலியுறுத்தல்

ADDED : ஜூன் 19, 2024 05:21 AM


Google News
புதுச்சேரி : காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என திட்டக்குழு கூட்டத்தில் அமைச்சர் திருமுருகன் வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி மாநிலத்தின் 2024-25ம் நிதியாண்டு பட்ஜெட் தொடர்பான திட்டக்குழு கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் திருமுருகன் பேசியதாவது;

கடந்த காலத்தில் காரைக்காலுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்ததால், போது மான வளர்ச்சி காணவில்லை. எனவே, இந்தாண்டு காரைக்காலுக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யும்போது, பழுதாகியுள்ள அரசு கட்டடங்கள், பள்ளி, கல்லுாரி கடட்டங்களுக்கு புதிய கட்டடம் கட்ட நிதி தேவைப்படுகிறது.

திருப்பட்டினத்தில் அரசு கையப்படுத்தி உள்ள 230 ஏக்கர் நிலத்தில், சர்வதேச ஸ்டேடியம் அமைத்தால் உலக வரைபடத்தில் காரைக்கால் இடம்பெறும். பாரதியார் சாலை அகலப்படுத்தல், காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.

அரசலாற்றில் பருவ மழை யின்போது வரும் தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது. எனவே, ஆற்றை ஆழப்படுத்தவும், நகர பகுதி வடிகால் வாய்க்கால்களை அகலப்படுத்தி நீர் வெளியேற திட்டமிடல் வேண்டும்.

காரைக்கால் வளர்ச்சி பெற்ற பிராந்தியமாக மாற வேண்டுமானால் இந்தாண்டு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us