/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நுாறடி சாலையில் தாறுமாறாக நிறுத்தும் வாகனங்களால் விபத்து நுாறடி சாலையில் தாறுமாறாக நிறுத்தும் வாகனங்களால் விபத்து
நுாறடி சாலையில் தாறுமாறாக நிறுத்தும் வாகனங்களால் விபத்து
நுாறடி சாலையில் தாறுமாறாக நிறுத்தும் வாகனங்களால் விபத்து
நுாறடி சாலையில் தாறுமாறாக நிறுத்தும் வாகனங்களால் விபத்து
ADDED : ஜூலை 08, 2024 04:28 AM

புதுச்சேரி: நுாறடி சாலை சாராதாம்பாள் கோவில் அருகே சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
புதுச்சேரி இந்திரா சிக்னலில் இருந்து ராஜிவ் சிக்னல் வரையிலான 100 அடி அகலம் கொண்ட விஸ்தாரமான சாலை உள்ளது. இந்த சாலையில், வரிசையாக நிறுத்தி வைக்கும் கனரக வாகனங்கள், பைக்குகளால் 50 அடி சாலையாக சுருங்கி விட்டது.
எல்லப்பிள்ளைச்சாவடி சாராதாம்பாள் கோவில் அருகே நுாற்றுக்கணக்கான மோட்டார் பைக்குகள் தாறுமாறாக சாலையில் நிறுத்தி வைக்கின்றனர். என்.டி. மஹால் அருகில் மெகா கிரேன், பஸ், லாரிகளும், கல்வித் துறை வளாகம் அருகில் வரிசையாக கார்கள் நிறுத்துகின்றனர். இதனால் இச்சாலையில் சாராதாம்பாள் கோவில் அருகே கடும் டிராபிக் ஜாம் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.