Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அதிகளவு குடித்த தொழிலாளி பலி 

அதிகளவு குடித்த தொழிலாளி பலி 

அதிகளவு குடித்த தொழிலாளி பலி 

அதிகளவு குடித்த தொழிலாளி பலி 

அதிகளவு குடித்த தொழிலாளி பலி 

ADDED : ஜூலை 27, 2024 01:42 AM


Google News
திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு டி.வி.மலை ரோட்டை சேர்ந்தவர் ஜோதி, 54; கூலி தொழிலாளி.

குடிப்பழக்கம் உடைய இவர் கடந்த சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து, சாராயம் குடித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திருக்கனுார் சாராயக்கடை எதிரே இறந்து கிடந்தார்.

தகவலறிந்த திருக்கனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஜோதி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவரது தம்பி அழகானந்தன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.