ADDED : ஜூலை 12, 2024 10:59 PM
திருக்கனுார்: குமாரப்பாளையத்தில் வழக்கறிஞரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த கொடாத்துார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை, 34; வழக்கறிஞர். இவர் நேற்று முன்தினம் எறையூர் பகுதியை சேர்ந்த தீனா என்பவரை சந்திக்க குமராப்பாளையம் சென்றார். அப்போது, அங்குள்ள மதுபான கடையில் கொடாத்துாரைச் சேர்ந்த கார்த்தி, 30; என்பவர் குடிபோதையில் தீனாவிடம் தகராறில் ஈடுபட்டார். இதை கண்ட ஏழுமலை, தீனாவை சமாதானப்படுத்தி வீட்டிற்கு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, குடிபோதையில் இருந்த கார்த்தி, ஏழுமலையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
ஏழுமலை அளித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து கார்த்தியை தேடி வருகின்றனர்.