/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூலக்குளம் - ஜவகர் நகர் சென்டர் மீடியனில் 24 இடங்களில் இடைவெளி மூலக்குளம் - ஜவகர் நகர் சென்டர் மீடியனில் 24 இடங்களில் இடைவெளி
மூலக்குளம் - ஜவகர் நகர் சென்டர் மீடியனில் 24 இடங்களில் இடைவெளி
மூலக்குளம் - ஜவகர் நகர் சென்டர் மீடியனில் 24 இடங்களில் இடைவெளி
மூலக்குளம் - ஜவகர் நகர் சென்டர் மீடியனில் 24 இடங்களில் இடைவெளி
ADDED : ஜூன் 22, 2024 04:34 AM

புதுச்சேரி : விழுப்புரம் நெடுஞ்சாலை சென்டர் மீடியனில், ஜவகர் நகர் - மூலக்குளம் இடையே 24 இடங்களில் விடப்பட்டுள்ள இடைவெளியால் விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், எம்.என் குப்பம் முதல் இந்திரா சிக்னல் வரையிலான 11.24 கி.மீ., சாலையை ரூ. 59.49 கோடி மதிப்பில் அகலபடுத்துதல், சங்கராபரணி ஆற்றில் பாலம் கட்டும் பணி துவங்கியது.
பாலம் கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளது. எம்.என்.குப்பத்தில் இருந்து அரும்பார்த்தபுரம் பாலம் வரை சென்டர் மீடியன் அமைத்துள்ளனர்.
மூலக்குளம் பஸ் நிறுத்தில் இருந்து ஜவகர் நகர் பஸ் நிறுத்தம் வரை சென்டர் மீடியன் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சென்டர் மீடியன் என்பது சாலையில் செல்லும் வாகனங்கள் ஒன்றையொன்று முந்திக் கொண்டு செல்வதால் ஏற்படும் விபத்து, சாலையின் குறுக்கே திடீரென புகும் வாகனங்கள் ஏற்படும் விபத்துக்களை தடுக்க அமைக்கப்படும் தடுப்பு.
மூலக்குளம் முதல் ஜவகர் வரையிலான 2.1 கி.மீ., துாரத்தில் மொத்தம் 24 இடங்களில் இடைவெளி விட்டு சென்டர் மீடியன் அமைத்துள்ளனர்.
10 அடி துாரத்திற்கு ஒரு இடைவெளி என்ற விதத்தில், அடுத்தடுத்து இடைவெளி இடம்பெற்றுள்ளது.
இதனால் தெருவில் இருந்து வரும் வாகனங்கள் நேராக இடைவெளி வழியாக குறுக்கில் புகும்போது,வேகமாக வரும் வாகனங்கள்பைக்குகள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர்.
ஜெயா நகர், ரத்னா ஸ்டோர், கல்கி கோவில் உள்ளிட்ட சில இடங்களில் 150 அடி அகலத்திற்கும் அதிகாரிகள்இடைவெளி விட்டுள்ளனர். இப்படி சகட்டு மேனிக்கு இடைவெளி விட்டு சென்டர் மீடியன் அமைப்பது விபத்தை குறைப்பதற்கு பதில் விபத்துக்களை அதிகரிக்க செய்யும்.
வடக்கு போக்குவரத்து எஸ்.பி.யின் பரிந்துரையின் பெயிரிலே,சென்டர் மீடியன் இடைவெளி விடுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இப்படி 10 அடிக்கு ஒரு இடைவெளியுடன்சென்டர் மீடியன் அமைப்பதிற்கு, ஒட்டுமொத்தமாக சென்டர் மீடியன் அமைக்காமலே இருக்கலாம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.