ADDED : ஜூலை 28, 2024 06:37 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் பள்ளி ஆண்டு விழாவின் போது திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லாஸ்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று மாலை ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தபோது சிலர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது பட்டாசில் இருந்த வெளிவந்த தீப்பொறி ஒரு மாணவி உடையில் பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அதனை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.