/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செங்கேணியம்மனுக்கு 501 பாலகுட அபிஷேகம் செங்கேணியம்மனுக்கு 501 பாலகுட அபிஷேகம்
செங்கேணியம்மனுக்கு 501 பாலகுட அபிஷேகம்
செங்கேணியம்மனுக்கு 501 பாலகுட அபிஷேகம்
செங்கேணியம்மனுக்கு 501 பாலகுட அபிஷேகம்
ADDED : ஜூலை 22, 2024 01:44 AM

திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் செங்கேணி மாரியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு, 16ம் ஆண்டு 501 பால் குட அபிஷேகம் நேற்று நடந்தது.
இதையொட்டி, காலை 6:00 மணிக்கு நவதுர்கா ஹோமம், காலை 10:30 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகத்துடன், 501 பால்குடங்கள் மாட வீதி வழியாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இரவு 9:00 மணிக்கு செங்கேணி மாரியம் மனுக்கு ஊஞ்சல் உற்சவம், கும்பம் படைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் ரமணி நடராஜன், திருக்குமரன், உஷாராணி கலியபெருமாள், லட்சுமணன், நரசிம்மன், செங்கேணியம்மன் கோவில் பூசாரிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.