/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு புவனகிரியில் மேலும் 3 பேர் கைது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு புவனகிரியில் மேலும் 3 பேர் கைது
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு புவனகிரியில் மேலும் 3 பேர் கைது
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு புவனகிரியில் மேலும் 3 பேர் கைது
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு புவனகிரியில் மேலும் 3 பேர் கைது
ADDED : ஜூன் 13, 2024 08:22 AM

புவனகிரி : முன்விரோதத்தில், பெட்ரோால் குண்டு வீசி, மூவரை வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் மூவரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி அடுத்த பெருமாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் திருமலைராஜன்,44; இவருக்கும், ஆதிவராகநத்தத்தை சேர்ந்த அருண்குமாருக்கும் முன்விரோதம் உள்ளது.
இதன் காரணமாக அருண்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மே 13ம் தேதி குளக்கரையில் மது குடித்து கொண்டிருந்த திருமலைராஜன் உள்ளிட்ட மூவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். அதில் தப்பியோடிய மூவரையும் கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். அதில் படுகாயமடைந்த மூவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து பெருமாத்துார் புகழேந்தி,25; ஆதிவராகநத்தம் தியாகராஜன்,45; மற்றும் ரஞ்சித்குமார்,23; ஆகியோரை கடந்த 18ம் தேதி கைது செய்தனர். அருண்குமார் உள்ளிட்ட மூவரை தேடிவந்தனர்.
இந்நிலையில் ஆதிவராகநத்தம் மேலத்தெரு அருண்குமார்,35; பெருமாத்துார் விஜய்,24; சிதம்பரம் அம்மாபேட்டை விமல்ராஜ் ,20; ஆகியோரை நேற்று புவனகிரி போலீசார் கைது செய்தனர்.