/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு ரயிலில் வந்த 3 லட்சம் லிட்டர் மொலாசஸ் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு ரயிலில் வந்த 3 லட்சம் லிட்டர் மொலாசஸ்
நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு ரயிலில் வந்த 3 லட்சம் லிட்டர் மொலாசஸ்
நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு ரயிலில் வந்த 3 லட்சம் லிட்டர் மொலாசஸ்
நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு ரயிலில் வந்த 3 லட்சம் லிட்டர் மொலாசஸ்
ADDED : ஜூலை 23, 2024 02:39 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 3 லட்சம் லிட்டர் மொலாசஸ் வந்தது.
நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையில் ஆண்டுக்கு 15 லட்சம் டன் கரும்பு அறவை நடந்தது. ஆனால் கட்டுபடியாகாத விலை, இடுபொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை என பல்வேறு பிரச்னைகளால் விவசாயிகள் கரும்பு பயிரிட ஆர்வம் காட்டவில்லை. இதனால் தற்போது ஆலையின் கரும்பு அறவை 10 லட்சம் டன்னாக குறைந்தது.
பதிவு இல்லாத கரும்பை வாங்கி வந்தனர். தற்போது பிற தனியார் ஆலைகள் போட்டி போட்டு பதிவு இல்லாத கரும்பை அதிக விலை கொடுத்து வாங்குவதால் பதிவு இல்லாத கரும்பும் அதிகம் வரவில்லை. ஆனால் ஈ.ஐ.டி.பாரி ஆலை நிர்வாகம் பெட்ரோலிய ஆலைகளிடம் ஆண்டுக்கு குறிப்பிட்ட அளவு எத்தனால் தர ஒப்பந்தம் செய்துள்ளது.
தற்போது அதிக கரும்பு இல்லாததால் எத்தனால் தயாரிக்க தேவைப்படும் கரும்பு கசடு என்னும் மொலாசஸ் உற்பத்தி குறைந்தது.
இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 70 டேங்கர்களில் 3 லட்சம் லிட்டர் மொலாசஸ் நெல்லிக்குப்பம் ரயில் நிலையம் வந்தது. இதை டேங்கர் லாரிகள் மூலம் ஆலைக்கு எடுத்து சென்றதை தொடர்ந்து, எத்தனால் தயாரிக்கும் பணி துவங்கியது.
உள்ளூர் விவசாயிகளின் கரும்புக்கு கூடுதல் விலை கொடுத்தால் உள்ளூர் விவசாயிகள் அதிக பரப்பளவில் கரும்பு பயிர் செய்வார்கள். அப்போது வெளியூரில் இருந்து அதிக செலவு செய்து மொலாசஸ் எடுத்து வர வேண்டிய தேவை இருக்காது என விவசாயிகள் கூறினர்.