ADDED : ஜூலை 08, 2024 04:15 AM
பாகூர்: கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட 24 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் 2023-24ம் ஆண்டிற்கான சாராயம் மற்றும் கள்ளு கடைகளுக்கான உரிமம் முடிவடைந்த நிலையில் அனைத்து கடைகளும் சீல் வைக்கப்பட்டு, ஏலம் தற்போது நடந்து வருகிறது.
இதனிடையே, சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில், பாகூர் அடுத்த கடுவனுா ரில் கள்ளத்தனமாக சாராயம் விற்பனை செய்த முதலியார்பேட்டையை சேர்ந்த சுப்ரமணி, 65; என்பவரை பாகூர் போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 8 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோன்று, கிருமாம்பாக்கம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட 16 லிட்டர் சாராயத்தை, போலீசார் பறிமுதல் செய்து கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.