Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சொத்துவரி விதிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 2 பேர் கைது கடலுார் மாநகராட்சியில் பரபரப்பு

சொத்துவரி விதிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 2 பேர் கைது கடலுார் மாநகராட்சியில் பரபரப்பு

சொத்துவரி விதிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 2 பேர் கைது கடலுார் மாநகராட்சியில் பரபரப்பு

சொத்துவரி விதிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 2 பேர் கைது கடலுார் மாநகராட்சியில் பரபரப்பு

ADDED : ஜூன் 08, 2024 05:58 AM


Google News
Latest Tamil News
கடலுார், : கடலுார் மாநகராட்சியில் சொத்து வரி விதிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலுார், மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம், 40; தச்சு தொழிலாளி. இவர், தனது வீட்டின் பின் பகுதியில் மரப்பட்டறை அமைக்க ெஷட் அமைத்துள்ளார். இதற்கு சொத்து வரி நிர்ணயிக்க கோரி கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

சொத்து வரி விதிக்க, வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என செல்வம் கூறியதற்கு, மூன்று தவணைகளில் தருமாறு பாஸ்கரன் கேட்டார்.

இதுகுறித்து செல்வம் கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை நேற்று மாலை 3:30 மணிக்கு, மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் பாஸ்கரனிடம் செல்வம் வழங்கினார்.

அப்போது, கூடுதல் எஸ்.பி., தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சுந்தர்ராஜன், அன்பழகன் மற்றும் போலீசார், லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன்,55; மற்றும் உடந்தையாக இருந்த உதவியாளர் லட்சுமணன்,45; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து அலுவலகம் முழுதும் மாலை 6:00 மணி வரை தீவிர சோதனை நடத்தினர். இச்சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

இந்த அலுவலகத்தில் கட்டடம் மற்றும் மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரின் பேரில் கடந்தாண்டு மார்ச் 15ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us