/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கள்ளச்சாராய வழக்கில் கைதான 15 பேர் மேலும் இரு வழக்கில் கைது கள்ளச்சாராய வழக்கில் கைதான 15 பேர் மேலும் இரு வழக்கில் கைது
கள்ளச்சாராய வழக்கில் கைதான 15 பேர் மேலும் இரு வழக்கில் கைது
கள்ளச்சாராய வழக்கில் கைதான 15 பேர் மேலும் இரு வழக்கில் கைது
கள்ளச்சாராய வழக்கில் கைதான 15 பேர் மேலும் இரு வழக்கில் கைது
ADDED : ஆக 07, 2024 06:10 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதிகளில் சாராயம் விற்றவர்கள், சாராய சப்ளையர்கள் மற்றும் மெத்தனால் சப்ளையர்கள் என 24 பேரை கைது செய்தனர்.
அவர்களில் சின்னதுரை, ஜோசப், ஷாகுல்ஹமீது, கண்ணன், மாதேஷ், கதிரவன், கவுதம்சந்த், பன்ஷிலால் உட்பட 15 பேருக்கு, கச்சிராயபாளையம் மற்றும் சங்கராபுரம் ஸ்டேஷன்களிலும் பதியப்பட்ட வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அதனையொட்டி 15 பேரையும் நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசார், கள்ளக்குறிச்சி கோர்ட்டில்ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.